என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஹமாஸ் போராளிகள்
நீங்கள் தேடியது "ஹமாஸ் போராளிகள்"
இஸ்ரேல்-பாலஸ்தீனம் எல்லைப்பகுதியான காசாவில் ஆதிக்கம் செலுத்திவரும் ஹமாஸ் போராளிகளை கண்டித்து ஐ.நா.சபையில் கொண்டு வந்த தீர்மானத்தில் இந்தியா நடுநிலை வகித்தது. #Indiaabstains #GeneralAssemblyresolution #condemnHamas #Hamas
நியூயார்க்:
பாலஸ்தீன எல்லையோரம் உள்ள காஸா பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் நாட்டு ராணுவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது.
ஹமாஸ் போராளிகள் அவ்வப்போது இஸ்ரேல் பகுதிக்குள் ஏவுகணைகளை வீசி அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேல் ராணுவத்தினரை கொல்லும் முயற்சியில் ஈடுபட்டதாக ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் எல்லையில் கொல்லப்படுகின்றனர்.
இந்நிலையில், ஹமாஸ் உள்ளிட்ட போராளிகள் குழுக்களை கண்டித்தும், மத்திய வளைகுடா பகுதியில் அமைதி நடவடிக்கைகளை துரிதப்படுத்த கோரியும் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா ஒரு தீர்மானத்தை இன்று முன்வைத்தது.
இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 87 நாடுகள் வாக்களித்தன. எதிராக 58 வாக்குகள் கிடைத்தன. இந்தியா உள்பட 32 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்தன. போதிய ஆதரவு இல்லாமல் இந்த தீர்மானம் தோல்வியடைந்தது.
ஹாமாஸ் இயக்கத்தினரால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பாலஸ்தீன மக்கள்தான். அவர்களுக்காகவாவது, ஹமாஸ் நடத்திவரும் பேரழிவுகளைப் பற்றி இப்போது பேச இந்த உலகம் முன்வர வேண்டும் என்று குறிப்பிட்டார்.
வாக்கெடுப்புக்கு பின்னர் பேசிய இஸ்ரேல் நாட்டு தூதர் டான்னி டானான், ‘அல் கொய்தா, போக்கோ ஹரம் பயங்கரவாதிகளுக்கும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை. இந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தவர்கள் எல்லாம் வெட்கப்பட வேண்டும்’ என்று தெரிவித்தார்.
இதேபோல், இந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தது ஏன்? என்பது தொடர்பாக வேறு சில நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகளும் அவையில் விளக்கம் அளித்தனர். #Indiaabstains #GeneralAssemblyresolution #condemnHamas #Hamas
பாலஸ்தீன எல்லையோரம் உள்ள காஸா பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் நாட்டு ராணுவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது.
ஹமாஸ் போராளிகள் அவ்வப்போது இஸ்ரேல் பகுதிக்குள் ஏவுகணைகளை வீசி அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேல் ராணுவத்தினரை கொல்லும் முயற்சியில் ஈடுபட்டதாக ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் எல்லையில் கொல்லப்படுகின்றனர்.
இந்நிலையில், ஹமாஸ் உள்ளிட்ட போராளிகள் குழுக்களை கண்டித்தும், மத்திய வளைகுடா பகுதியில் அமைதி நடவடிக்கைகளை துரிதப்படுத்த கோரியும் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா ஒரு தீர்மானத்தை இன்று முன்வைத்தது.
இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 87 நாடுகள் வாக்களித்தன. எதிராக 58 வாக்குகள் கிடைத்தன. இந்தியா உள்பட 32 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்தன. போதிய ஆதரவு இல்லாமல் இந்த தீர்மானம் தோல்வியடைந்தது.
இந்த வாக்கெடுப்புக்கு முன்னதாக பேசிய அமெரிக்காவுக்கான ஐ.நா. தூதர் நிக்கி ஹாலே, இஸ்ரேலுக்கு எதிராக இங்கு சுமார் 500 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால், ஹமாஸ் இயக்கத்தினருக்கு எதிராக ஒரு தீர்மானம்கூட கொண்டு வரப்படவில்லை.
வாக்கெடுப்புக்கு பின்னர் பேசிய இஸ்ரேல் நாட்டு தூதர் டான்னி டானான், ‘அல் கொய்தா, போக்கோ ஹரம் பயங்கரவாதிகளுக்கும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை. இந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தவர்கள் எல்லாம் வெட்கப்பட வேண்டும்’ என்று தெரிவித்தார்.
இதேபோல், இந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தது ஏன்? என்பது தொடர்பாக வேறு சில நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகளும் அவையில் விளக்கம் அளித்தனர். #Indiaabstains #GeneralAssemblyresolution #condemnHamas #Hamas
காஸா முனையில் இருந்தவாறு தாக்குதல் நடத்தும் ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேல் அரசுக்கும் இடையே புதிய போர்நிறுத்த ஒப்பந்தம் கையொப்பமானது. #Israelceasefire #Gazaceasefire
ஜெருசலேம்:
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான காஸா என்ற பகுதியை கைப்பற்றியுள்ள ஹமாஸ் போராளிகள், ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் பிடியில் இருந்து மீட்பதற்காக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2005-ம் ஆண்டுவரை காஸா முனையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த இஸ்ரேல் அரசு பின்னர் அங்கிருந்து படைகளை விலக்கி கொண்டாலும், இங்குள்ள கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இதற்கிடையில், இஸ்ரேல் நாட்டின் தலைநகரான டெல் அவிவ் நகரில் இயங்கிவந்த அமெரிக்க தலைமை தூதரகத்தை கிழக்கு ஜெருசலேம் நகருக்கு மாற்ற உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் நாட்டின் புதிய தலைநகராக கிழக்கு ஜெருசலேம் நகரை அங்கீகரிப்பதாக சமீபத்தில் அறிவித்தார்.
இதனால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தொற்றியுள்ளது. குறிப்பாக, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே உச்சகட்ட மோதல் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
குறிப்பாக, காஸா எல்லைப்பகுதியில் இருந்து ஹமாஸ் போராளிகள் ராக்கெட்களை இஸ்ரேல் நாட்டுக்குள் வீசி தாக்குதல் நடத்துவதும் அதற்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரேல் விமானப் படைகள் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிகள் முகாம்களின்மீது தாக்குதல் நடத்துவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.
காஸா முனையின் மேற்கு பகுதியில் நேற்று இஸ்ரேல் நடத்திய ராக்கெட் தாக்குதல்களில் 15 மற்றும் 16 வயதுடைய இரு சிறுவர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இந்நிலையில், ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேல் அரசுக்கும் இடையே புதிய போர்நிறுத்த ஒப்பந்தம் நேற்று கையொப்பமானது.
எகிப்து நாட்டின் சமரச திட்டத்தை ஏற்று இஸ்ரேல் அரசுடன் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதாக காஸா பகுதியில் இயங்கிவரும் ஹமாஸ் இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் ஃபவ்ஸி பர்ஹோம் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த தகவலை உறுதிப்படுத்த இஸ்ரேல் அதிகாரிகள் மறுத்துள்ளனர். இனி நடைபெறும் சம்பவங்கள் மற்றும் களநிலவரங்களின் அடிப்படையில்தான் இந்த போர்நிறுத்தம் விவகாரத்தில் இஸ்ரேல் அரசின் நடவடிக்கையை தீர்மானிக்க முடியும் என அந்நாட்டு ராணுவ செய்தி தொடர்பாளர் ஒருவர் குறிப்பிட்டார். #Israelceasefire #Gazaceasefire
×

X